சாவில் இருந்து தப்பினாலும், சாவு இவரை விட்டபாடாக இல்லை. எமன் இவரை துரத்த ஆரம்பித்துள்ளாரா என்ற கேள்விகள் எழுகிறது. காரணம் இவர் தற்கொலைக்கும் முயன்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவருக்கு ஒவ்வொரு ராத்திரியும் 270 பயணிகள் எரிந்து சாகும் கனவு வருகிறது. கொல்லப்பட்டவர்கள் கனவில் வருகிறார்கள் என்று கூறுகிறது இவரது குடும்பம் …
கனவுகளில் துரத்தும் மரணம்! – ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பிரிட்டிஷ் பயணி: “அனைவரும் இறப்பதை என் கண்களால் காண்கிறேன்!” – குடும்பத்தினர் வேதனை!
லண்டன்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், 242 பேரில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒரே பிரிட்டிஷ் குடிமகன், அந்தப் பெரும் துயரத்தின் கோரக் காட்சிகளால் இன்னும் கனவுகளில் துரத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். “அனைவரும் என் கனவுகளில் இறப்பதைக் காண்கிறேன்” என்று அவர் அடிக்கடி கூறுவதாகவும், அந்தச் சம்பவம் அவரைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு ஒரு நிமிடத்திற்குள்ளேயே விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம் 171, 241 உயிர்களைப் பலிவாங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் என மொத்தம் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் இருந்து அதிசயமாக உயிர் பிழைத்த ஒரே ஒரு பிரிட்டிஷ் பயணி, தற்போது அந்தத் துயரச் சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.
விபத்து நடந்த விதம், விமானிகள் அறையில் எரிபொருள் சுவிட்சுகள் அணைக்கப்பட்ட மர்மம் ஆகியவை குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் இருந்து தப்பியவரின் மனநிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் கூறுகையில், “அவனுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. தூங்க ஆரம்பித்தாலும், விமானம் வெடித்து சிதறுவதும், அனைவரும் உயிரிழப்பதும் கண் முன்னால் கனவாக வந்து அவனை உலுக்கி விடுகின்றன. அந்த திகிலிலிருந்து அவன் இன்னும் மீளவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
அவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், தற்போது உடல் ரீதியாக தேறி வந்தாலும், மனரீதியாக அந்தப் பேரழிவின் வடுக்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. “அவன் ஒரு அற்புதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகும் போலிருக்கிறது,” என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.