வடக்கு வேல்ஸில் உள்ள கடற்கரைகளில், “பெரிய செவிமெழுகு கட்டிகள்” போல் தோற்றமளிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாமாயில் கட்டிகள் ஒதுங்கியுள்ளன. இதுகுறித்து, நாய்களை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் தகவல்படி, ஆங்கிள்சி கடற்கரைகளில் பாமாயில் கட்டிகள் ஒதுங்கியுள்ளன. இந்த கட்டிகள், விசித்திரமான வாசனையுடன், திமிங்கில முட்டைகள் போல இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வரும் நாய்கள் இந்த பாமாயில் கட்டிகளை சாப்பிட வாய்ப்புள்ளது. இந்த பாமாயில், நாய்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் கணைய அழற்சி (pancreatitis) போன்ற தீவிர நோய்களும் ஏற்படலாம்.
இந்தக் கட்டிகள் கடலில் மிதந்து வரும்போது, டீசல், ரசாயனங்கள், கழிவுநீர் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சியிருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிகளைத் தொடுவதைத் தவிர்க்குமாறும், நாய்களை கடற்கரையில் கட்டியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.