‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இணைந்து நடித்த நடிகர் அபிநய்க்கு நடிகர் தனுஷ் நிதியுதவி!

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இணைந்து நடித்த நடிகர் அபிநய்க்கு நடிகர் தனுஷ் நிதியுதவி!

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த நடிகர் அபிநய், கல்லீரல் தொடர்பான கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவ நடிகர் தனுஷ் முன்வந்துள்ளார்.

சமீபகாலமாக உடல் மற்றும் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் அபிநய்க்கு, நடிகர் தனுஷ் ₹5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக் குறைவால் வேலையின்றி தவித்து வந்த அபிநய், ஒரு பேட்டியில், தனது நிலை குறித்து மனம் திறந்து பேசினார். “நான் சீக்கிரமாகப் போய்விடுவேன்” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதற்கு முன்னதாக, நடிகர் மற்றும் காமெடியன் ‘கலக்கப்போவது யாரு’ பாலா, அபிநய்க்கு ₹1 லட்சம் நிதியுதவி அளித்து ஆதரவு தெரிவித்தார்.

அபிநய்யின் பின்னணி: 2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தனுஷ், ஷெரின் ஆகியோருடன் இணைந்து அபிநய் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘ஜங்ஷன்’, ‘சிங்காரச் சென்னை’ போன்ற படங்களில் நாயகனாகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். நடிகர் அபிநய், தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’க்குப் பிறகு சில படங்களில் நடித்தார். அதேபோல், ‘துப்பாக்கி’, ‘பையா’ போன்ற படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை காரணமாக அவர் நடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனுஷ் அளித்த இந்த நிதியுதவி, அபிநய்யின் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.