சிம்பு-வெற்றிமாறன் படம் உறுதியானது! தாணுவுடன் கைகோக்கும் வெற்றிமாறன்!

சிம்பு-வெற்றிமாறன் படம் உறுதியானது! தாணுவுடன் கைகோக்கும் வெற்றிமாறன்!

அதிரடி அறிவிப்பு: சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில்  படம் உறுதியானது! மீண்டும் தாணுவுடன் கைகோக்கும் வெற்றிமாறன்!

சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படம் குறித்த நீண்ட நாள் எதிர்பார்ப்புகளுக்கு இப்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது. முதலில் பல தடைகளை சந்தித்த இந்தப் பெரிய பட்ஜெட் படம், இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ளது.

குழப்பத்தில் சிம்பு: கை கொடுத்த தாணு

இந்தப் படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் தயங்கியதால், ஆரம்பத்தில் சிம்பு சற்று மனக்குழப்பத்தில் இருந்தார். துபாயில் பல தயாரிப்பாளர்களிடம் பேசி, தொழில் அதிபர் கண்ணன் ரவியையும் சந்தித்துள்ளார். ஒரு கட்டத்தில் சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தது. சிம்பு, வெற்றிமாறனிடம் இது குறித்துப் பேச, ஆனால் வெற்றிமாறன் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.

தாணுவுக்கு விசுவாசமாக இருந்த வெற்றிமாறன்

ஏற்கனவே, வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூட்டணியில் ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாக இருந்தது. அதற்காக வெற்றிமாறன் தாணுவிடம் 10 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இந்த நிலையில், தாணுவைக் கைவிட மனமில்லாத வெற்றிமாறன், “முதலில் தாணுவுக்குப் படம் செய்துவிட்டு, பிறகுதான் வேறு தயாரிப்பாளர்களுக்குப் படம் பண்ணுவேன்” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

தாணு ஒரு நல்ல மனிதர் என்றும், அவர் கேட்கும்போதெல்லாம் உதவி செய்பவர் என்றும் வெற்றிமாறன் சிம்புவிடம் எடுத்துரைத்துள்ளார். இதனால், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை கைவிடப்பட்டு, மீண்டும் குறைந்த பட்ஜெட்டில் தாணுவின் தயாரிப்பிலேயே சிம்பு-வெற்றிமாறன் படம் உருவாகிறது. இது, சிம்பு ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவும், வெற்றிமாறனின் விசுவாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.