விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய வெப் தொடர்!

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய  வெப் தொடர்!

விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’ என்ற புதிய வெப் தொடரை ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாண்டிராஜ் இயக்கிய இந்த படத்தில் நித்யா மேனன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியான முதல் ஆறு நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி தற்போது ‘முத்து என்கிற காட்டான்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடரை மணிகண்டன் இயக்க, விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.