Posted in

6வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சம்பவம் செய்ய வரும் துருவ் விக்ரம்!

2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷின் ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘வாழை’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்யா வர்மா’ மூலம் அறிமுகமான துருவ் விக்ரம், ‘பைசன் காளமாடன்’ என்ற இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது. அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது, துருவ் விக்ரம் தனது பெரிய திரைக்கு திரும்புவதை உறுதிப்படுத்தும் விதமாக, படத்தின் வெளியீட்டு திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “6 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு எனது வருகை. ‘பைசன்’ இந்த தீபாவளிக்கு அக்டோபர் 17, 2025 அன்று திரு. மாரிசெல்வராஜ்  மூலம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்படும்” என்று துருவ் விக்ரம் ‘பைசன் காளமாடன்’ படத்தின் வெளியீட்டு திகதி போஸ்டரைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

Exit mobile version