அஜித்தை கெடுத்தது ரஜினி தான் – மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி குற்றச்சாட்டு!

அஜித்தை கெடுத்தது ரஜினி தான் – மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி குற்றச்சாட்டு!

தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் இடையேயான உறவு, ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு பேசுபொருளாகவே இருந்து வருகிறது. ரஜினியின் தீவிர ரசிகரான அஜித், ‘பில்லா’ ரீமேக் மூலம் பெரும் வெற்றி பெற்று தனது திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இது ஒருபுறம் இருக்க, ”அஜித்தை கெடுத்தது ரஜினி தான்” என்று மூத்த பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் அஜித் ஊடகத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார். ஆனால், இன்று ஊடகங்களை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு, தனித்து இருப்பதற்கு ரஜினியே காரணம்” என்று பிஸ்மி கூறியுள்ளார்.

இந்த மீடியா பசங்க எல்லாரும் ஆபத்தானவர்கள்; இவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். உன் வாயைக் கிளறி உன்னைக் காலி செய்துவிடுவார்கள். அவர்களைத் தள்ளியே வை என்று ரஜினிதான் அஜித்திடம் அறிவுரை கூறியுள்ளார். அஜித்தின் நலன் கருதித்தான் ரஜினி இப்படிச் சொன்னார் என்பதையும் மறுக்க முடியாது என்று பிஸ்மி தெரிவித்தார்.

ஆரம்ப காலத்தில் அஜித் மிகவும் துடிப்பான பேச்சாளராக இருந்தார். அவரிடம் ஒரு நேர்காணல் எடுக்கச் சென்றால், ஐந்து நிமிடம் விஜய்யைத் திட்டிவிட்டுத்தான் மற்ற விஷயங்களைப் பேசுவார். பத்திரிகையாளர்கள் நேர்காணல் எடுக்கவே தயங்குவார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருந்த அஜித்தை, ரஜினி கொடுத்த இந்த அட்வைஸ் தான் பக்குவப்படுத்தி, அவரை வேறு ஒரு நபராக மாற்றியது என்று பிஸ்மி கூறினார்.