சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படத்துக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு பரபரப்பான தகவல் கோலிவுட் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது உறுதியான நிலையில், சிவகார்த்திகேயனும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பதாக ரசிகர்கள் டீகோட் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்!
‘கூலி’யின் டிரெய்லரில், ரஜினியின் இளமைக்கால காட்சிகளில் தொழிலாளர்கள் கூட்டத்தில் ஒரு நபர் பின்னாலிருந்து பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த நபரின் தலைமுடி, உடல்மொழி, மற்றும் குரல் சிவகார்த்திகேயனைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விவாதத்துக்கு மேலும் தீமூட்டும் விதமாக, ஆமிர் கான் ஒரு சமூக வலைதள பதிவில் ‘கூலி’ படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் சிவகார்த்திகேயனையும் டேக் செய்துள்ளார். இது, சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது முந்தைய படமான ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவை ஒரு சிறிய கேமியோ ரோலில் நடிக்க வைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல, ‘கூலி’ படத்திலும் ஒரு பெரிய சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.