சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் மாளவிகா மோகனன் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவருக்கு, “ஹாட்ஸ்டெப்பர் ஆஃப் தி இயர்” (Hotstepper Of The Year) மற்றும் “ஹாட்ஸ்டெஸ்ட் ஸ்டார் ஆஃப் தி இயர்” (Hottest Star Of The Year) ஆகிய இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகள் வென்ற மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள மாளவிகா மோகனன், “இந்த விருதுகளும் சூடாகவே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே இரவில் இரண்டு விருதுகளை வென்ற மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
மாளவிகா மோகனன் தற்போது தமிழில் ‘சர்தார் 2’, தெலுங்கில் ‘தி ராஜா சாப்’ மற்றும் மலையாளத்தில் ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.