யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 4 எலும்புக்கூடுகள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், இதுவரை கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அகழ்வாராய்ச்சி தளங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் முற்றிலுமாக தோண்டியெடுக்கப்பட்ட 5 எலும்புக்கூடுகளையும் சேர்த்து, மொத்தமாக 117 எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்களை அனுமதித்த நிலையில், இன்று 28-வது நாள் பணி நடைபெற்றது. கடந்த 13 நாட்களாக நடைபெற்ற இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதிப் பணியில் மட்டும் 52 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் 37 நாட்கள் நடைபெற்றுள்ளன.