மன்னாரில் பெரும் பரபரப்பு! பட்டப்பகலில் கத்தி முனையில் ஒருவர் கடத்தல்!

மன்னாரில் பெரும் பரபரப்பு! பட்டப்பகலில் கத்தி முனையில் ஒருவர் கடத்தல்!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்றுவிட்டு, தனியார் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரை, கூரிய ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் வழிமறித்துக் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், கடத்தப்பட்ட நபரை நடுக்குடா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கிய பின்னர் விடுவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுவீதியில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவம், அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் குறித்த காணொளி ஆதாரங்கள் பரவி வரும் நிலையில், காவல்துறை இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டவர் யார், கடத்தலுக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.