ஸ்டாக்ஹோம்: சுவீடனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரேப்ரோ (Orebro) நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலின்போது துப்பாக்கிச் சத்தத்துடன், “வெடிப்புகளும்” கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். உடனடியாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் திரண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.