மொத்த இந்தியாவைவும் உலுக்கிய விஜயின் மதுரை மாநாடு: எத்தனை லட்சம் மக்கள் ?

மொத்த இந்தியாவைவும் உலுக்கிய விஜயின் மதுரை மாநாடு: எத்தனை லட்சம் மக்கள் ?

நேற்றைய தினம்(21) மதுரையில் நடிகர் விஜய் நடத்திய 2வது மாநாட்டில், எத்தனை லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. பார்க்கும் இடம் எல்லாமே மக்கள் கூட்டம். இதுவரை MGR க்கோ, ஜெயலலிதாவுக்கோ, இல்லையேம் கருணாநிதிக்கோ இந்த அளவு கூட்டம் சேரவே இல்லை என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

டெல்லியில் உள்ள அனைத்து தொலைக் காட்சிகளும், இன்று(22) விஜய் மாநாட்டைப் பெற்றியே பேச ஆரம்பித்துள்ளது. அது போக ஒட்டு மொத்த இந்தியாவிலும் விஜய் மாநாட்டைப் பெற்றி ஊடகங்கள் பேச ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் உள்ள பல கட்சிகள் வாயை திறக்கவே அச்சமடைந்துள்ளது.

இந்த முறை விஜய் MGR அரை பற்றிப் பேசி, அண்ணா திராவிட முன்னேறக் கழக தொண்டர்களின் ஆதரவை பெற்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.  இது போக மதுரை மண்ணில் கேப்டன் விஜய காந்தைப் பற்றி பேசி, அவரது ஆதரவாளர்களையும் வென்று விட்டார் விஜய். பொதுவாக டெல்லியில் உள்ள TVக்கள் என்ன சொல்கிறது என்றால். தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், 7 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் எல்லா வீடுகளிலும் குறைந்த பட்சம் ஒருவராவது, விஜய் ரசிகராக உள்ளார். இதனால் 18 வயது தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், மற்றும் பெண்கள் விஜய்க்கு வாக்குப் போடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில், ஒரு தொகுதியில் சராசரியாக 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளார்கள். அதில் 70,000 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் எடுப்பவர் வெற்றியாளராக மாறுவார். இதனை விஜய் கட்சி இலகுவாக அடைந்து விடும் என்று கூறுகிறார்கள். இதனால் தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராக விஜய் வரும் வாய்ப்பு உள்ளது என்றும். இல்லையென்றால் கூட, ஆட்சியை நிர்ணயிக்கும் ஒரு பெரும் கட்சியாக விஜய் கட்சி வரும். இல்லையென்றால், பலமான ஒரு எதிர்கட்சியாக உருவாகும் என்று கூறுகிறார்கள்

நேற்று மதுரையில் விஜய்க்காக கூடிய கூட்டம், வெறும் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமாக தெரியவில்லை என்று பல அரசியல் அவதானிகள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் விஜய் மீது வெறி கொண்ட மக்களாக இருக்கிறார்கள். இதனால் தற்போது விஜய் என்ற நடிகர் மாபெரும், அரசியல் தலைவராக மாறியுள்ளார்.