சாதாரண தகராறுக்கு இத்தனை உயிர்களா? துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி!

சாதாரண தகராறுக்கு இத்தனை உயிர்களா? துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி!

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் நேற்று  நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.

பாங்காக்கின் பாங் சூ மாவட்டத்தில் உள்ள இந்த பிரபலமான உணவுச் சந்தையில், நான்கு பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ஒரு பெண் வியாபாரி ஆகியோர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், 61 வயதுடைய முன்னாள் பாதுகாப்பு காவலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2019 அல்லது 2020 ஆம் ஆண்டில் தனது கார் கீறப்பட்டதற்கான தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த பிறகு, தாக்குதல் நடத்தியவர் சந்தைக்குள்ளேயே ஒரு பெஞ்சில் அமர்ந்து தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது ஒரு தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த சம்பவம் என்றும், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களுடன் இதற்கு தொடர்பு இல்லை என்றும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாய்லாந்தில் துப்பாக்கி வன்முறை அசாதாரணமானது அல்ல. துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையானதாக இருந்தாலும், துப்பாக்கி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.