Child Sex Crimes தரையிறங்கிய விமானம் உடனே கைதான CO பைலட்

Child Sex Crimes தரையிறங்கிய விமானம் உடனே கைதான CO பைலட்

சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், டெல்டா விமானத்தின் துணை விமானி ஒருவர் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில் ஃபெடரல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்னசோட்டாவின் மினியாபோலிஸில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வந்தடைந்த டெல்டா விமானம் 2809 இல் இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு (ஜூலை 26, 2025) நடந்தது.

சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், Homeland Security Investigations (HSI) மற்றும் கான்ட்ரா கோஸ்டா கவுண்டி ஷெரிப் துறை அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்து, 34 வயதான துணை விமானி ருஸ்டோம் பகவட்கரை (Rustom Bhagwagar) கைது செய்தனர்.

கான்ட்ரா கோஸ்டா கவுண்டி ஷெரிப் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் மாதம் முதல் பகவட்கர் மீது குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் 10 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் ஐந்து முறை வாய்வழி பாலியல் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் 5 மில்லியன் டாலர் பிணையில் மார்ட்டினஸ் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டெல்டா ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில், “சட்டவிரோத செயல்களுக்கு டெல்டா பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் உள்ளது. சட்ட அமலாக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். கைது மற்றும் தனிநபர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம், மேலும் விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட நபர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.