இந்தியாவுக்கு அடி மேல் அடி: ரஷ்யாவின் இடைத் தரகராக மாறியுள்ளது இந்தியா என்கிறார் ட்ரம்ப்!

இந்தியாவுக்கு அடி மேல் அடி: ரஷ்யாவின் இடைத் தரகராக மாறியுள்ளது இந்தியா என்கிறார் ட்ரம்ப்!

DELHI- 06-08-2025: உக்ரைன் போரை இந்தியா ஊக்குவிக்கிறதா? என்ற புதிய கருத்தை வெளியிட்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அது என்னவென்றால், உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டன. இதனால், தனது கச்சா எண்ணெயை எங்கே ஏற்றுமதி செய்வது என ரஷ்யா திணறியபோது, இந்தியா கைகொடுத்துள்ளது. இதில், இந்தியா தனது தேவைக்கு மட்டும் கச்சா எண்ணெயை வாங்கியிருந்தால் பரவாயில்லை.

ஆனால், அளவுக்கு அதிகமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் மோடி அரசு, அதனை இலங்கை, மலேசியா, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு அதிக விலையில் விற்றுப் பெரும் பணம் சம்பாதித்து வருகிறது. இதனை மோப்பம் பிடித்த அமெரிக்க உளவுத் துறை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தத் தகவலை ட்ரம்ப்புக்குத் தெரிவிக்க, அவர் கடும் சீற்றம் அடைந்துள்ளார். ஏனென்றால், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கி இந்தியா விற்றுக் கொடுப்பதால் கிடைக்கும் பணத்தை வைத்தே ரஷ்யா தனது பாதுகாப்புச் செலவுகளைச் சமாளிக்கிறது.

இது அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவில் முகாமிட்டு, அந்நாட்டு அதிகாரிகளுடன் வரி விதிப்பு குறித்துப் பேசி வருகிறார்கள். ஆனால், எந்த ஒரு தீர்வையும் அவர்களால் எட்ட முடியவில்லை. காரணம், இந்தக் கச்சா எண்ணெய் இறக்குமதிதான். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை இந்தியா விதித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். ஆனால், இது நியாயம் அற்றது என்று இந்திய அரசு கூறுகிறது.

ரஷ்யாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று ட்ரம்ப்பையும் கட்டிப்பிடிக்கிறார். ஆனால், மோடியின் இரட்டை வேடம் தற்போது கிழிந்துவிட்டது. ரஷ்யாவுடன் இந்தியா எந்த வகையில் உறவை வைத்திருக்கிறது? என்ன எல்லாம் நடக்கிறது? என்பதை மிகவும் கவனமாக ஆராய அமெரிக்க உளவுத் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது இப்படியிருக்க, இந்தியா தனது பரம எதிரியான சீனாவுடன் தற்போது நல்லுறவை வளர்க்க ஆரம்பித்திருப்பது, இந்திய தேசியப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

அனைத்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எனப் பலம் வாய்ந்த நாடுகளை எதிர்த்து இந்தியாவால் எதனைச் சாதிக்க முடியும்? மோடி அரசின் தன்னிச்சையான போக்கு, இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.