டைட்டானிக் நாயகன் Leonardo DiCaprioவின் இன்றைய நிலை: உடல் எடையை இன்னும் குறைத்தார்

டைட்டானிக் நாயகன்  Leonardo DiCaprioவின் இன்றைய நிலை: உடல் எடையை இன்னும் குறைத்தார்

டைட்டானிக் படத்தை பார்காதவர் எவருமே இருக்க முடியாது. பாக்ஸ் ஆபிசைக் கலக்கிய ஒரு மாபெரும் வெற்றிப் படம். இதுவரை 200க்கும் மேற்பட்ட மொழிகளில் அது வெளியாகி உலக சாதனை படைத்துள்ளது. டைட்டானிக் என்றாலே எமக்கு நினைவில் வருவது, இளம் லெனா டி கப்றியோ தான்.

பால் முகம் ததும்ப, தனது காதலியை காப்பாற்றிவிட்டு, கடும் குளிர் கொண்ட அட்டலாண்டிக் கடலில் உறைந்து இறந்து போகும் ஹீரோ. அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்து, பெரும் செல்வந்தராகி விட்டார். தற்போது 50 வயதை எட்டியுள்ள லெனா டி கப்றியோ, தற்போது எந்தப் படங்களிலும் நடிப்பது இல்லை. வெறும் 27 வயது நிரம்பிட மாடல் அழகி விக்டோரியாவுடன் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய உடல் மீது அவருக்கு கவனம் இருக்கவில்லை என்று பல மீடியாக்களில் செய்திகள் வெளியாவது வழக்கம். காரணம் அவர் பருமணடைந்து மிகவும் குண்டாக காட்சி தந்தார். அவரை டைட்டானிக்கில் பார்த்த ரசிகர்கள் நேரில் பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். முகம் மிகவும் உப்பிக் காணப்பட்டது. இவரது மதுப் பழக்கம் ஒரு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

இடைப்பட்ட காலங்களில் போதைப் பொருள் பழக்கத்திற்கும் லெனா டி கப்றியோ ஆளாகி இருந்தார். பின்னர் ஒருவாறு மீண்டு, தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் தனது உடல் எடையைக் குறைக்க டயட்டில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.