இத்தாலியின் மிலான் மால்பென்சா விமான நிலையத்தில் பயங்கரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒருவன், சுத்தியல் கொண்டு செக்-இன் கவுண்டர்களை அடித்து நொறுக்கி, பின்னர் தீ வைத்துள்ளான். இந்தச் சம்பவம் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதால், பயணிகள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர்.
தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால், விமான நிலையத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது.